இந்த பூஉலகின் வயதானது 4.55 பில்லியன் (+/- 1%) ஆண்டுகள்!! இந்த நீண்ட நெடிய பயணத்தில் பூமி சந்தித்த மிகபெரிய அச்சுறுத்தல் 'நவீன மனிதர்கள்'. குறிப்பாக இந்தியா மற்றும் சில வளரும் நாடுகளில் இயற்க்கை மீதான பற்று சாதாரண மக்களிடையே குறைவாக இருப்பதை உணர முடிகிறது...
நாம் இந்த பூமிக்கு செய்த தீங்குகளை திருத்தி நம் சந்ததிகள் இந்த பூமியில் சற்றேனும் நிம்மதியாக வாழ, நம்மால் முடிந்த உருப்படியான செயல்பாடுகள் சிலவற்றை காண்போம்...
1. நமது கணினி திரைக்கு கீழே அழகான வடிவத்தில் ஒரு பொத்தான் இருக்கிறது அதை பயன் படுத்த முயல்வோம்.
2. மின் புத்தக வடிவில் வரும் பல பிரபலமான புத்தகங்களை காகிதத்தில் அச்சிட்டு படிப்பதை தவிர்ப்போம்.
முடிந்தவரை தேவைப்பட்டால் காகிதத்தில் அச்சிடுவோம், அவ்வாறு செய்யும்போது காகிதத்தின் இரண்டு பக்கங்களிலும் அச்சிட்டு பயன்படுத்தவும், இல்லாத பட்சத்தில் அவற்றின் பயன்பாடு முடித்த பிறகாவது அவற்றின் பின்புற காலி பக்கத்தை குழந்தைகளுக்கோ, நமக்கோ உதிரிப்பயன்பாடுகளுக்கு (Rough Use) பயன்படுத்திக்கொள்வோம்.
3. உங்களுடைய சடுதியான அவசரத்திலும் வீட்டுக்கு செல்லும் முன் உங்கள் கணினியை முழுமையாக அணைத்துவிட்டு செல்லவும்.
4. நாம் பெரும்பாலும் கூகிள் 'தேடு' சேவையை பயன்படுத்துபவர்கள், இதற்க்கு பிளாக்கில் "BLACKLE" எனப்படும் முகப்பு பக்கத்தை பயன்ப்டுதிக்கொள்ளுங்கள். இது முழுவதும் கருப்பு நிறத்தில் இருப்பதால் உங்கள் பிரௌசரின் முகப்பு பக்கம் ("Home Page") குறைந்த மின்சாரத்தை பயன்படுத்த முடியும்.
5. நான் சின்னப்பிள்ளையாக இருந்தபோது (15-20 வருடங்களுக்கு முன்பு) அனைவரும் கடைக்கு செல்லும்போது வீட்டிலிருந்து துணியினாலான பைகளை எடுத்து செல்வார்கள். ஆனால் இப்போதெலாம் பாலிதீன் பைகள் கண்களை பறிக்கும் நிறங்களில் வருகின்றன நாமும் அவைகளை பிடித்துக்கொண்டே கடைகளில் இருந்து பொருட்களை வாங்கி வர விரும்புகின்றோம். "உருவத்தை பார்த்து ஏமாறாதே" என்ற வாசகம் இந்த பாலிதீன் பைகளுக்கு நன்றாகவே பொருந்தும். இனி தயவு செய்து துணி பைகளை உபயோகிக்க பழகிகொள்ளுங்கள் (நாளை பாதையில் பாலிதீன் பைகள் சுழன்று காற்றில் மேலெலும் பொழுது எவ்வளவு மோசமாக இருக்கிறது!!)
6. ரோஜா, மல்லிகை, செம்பருத்தி செடிகளை வளர்க்கலாம்; இட வசதி இருந்தால் மா, வேம்பு, முதலிய மரங்களை வளர்க்கலாம்.
இது போன்ற செடிகள் மரக்கன்றுகள் 10 - 20 ரூபாய்க்கு கிடைக்கின்றன... அவற்றை வாங்கி கவனத்துடன் வளர்க்கலாம்.
7. மேலை நாடுகளில் குப்பைத்தொட்டிகள் பல பிரிவுகளாக இருக்கும், பழங்கள், உணவுப்பொருட்கள் என மக்கிப்போகும் வகைகள், மறு சுழற்சி செய்து பயன்படுத்தும் காகிதம், பிளாஸ்டிக் போத்தல் வகைகள், C.D, Floppy போன்ற மின்சாதன உபகரணங்கள் என தனித்தனியே பிரிக்கின்றனர். நாம் குறைந்தது மக்கிப்போவது மக்காதது என இரண்டு பிரிவுகளாக குப்பைகளை கொட்டவேண்டும்.
8. அதிக சத்தத்தோடு ஒலிக்கும் ஒலிப்பான்களை மனிதர்கள் வாழும் பகுதியிலும், குறிப்பாக நீங்கள் சுற்றுலா செல்லும் போது வன உயிரினங்கள் வாழும் பகுதிகளில் முற்றிலும் பயன் படுத்தாமல் இருப்பது மிக அவசியம்.
9. மீள் பயன்பாட்டுக்கு உகந்த பாட்டரி செல்களை பயன்படுத்துவோம். இவை ஒருமுறை வாங்க அதிக செலவானாலும் மிக்க நன்மை பயக்கும்.
10. மைஊற்றி எழுதும் பேனாகளையே பயன்படுத்த முயற்சிக்கவும், இல்லாத பட்சத்தில் புதிய பேனா வாங்குவதற்கு பதில் Refil வாங்கி பயன் படுத்தலாம்.
11. உங்கள் முகம் அலம்பும் குழாயை தேவை முடிந்ததும் முஉடி விடவும், அதன்பின் உங்கள் அழகான முகத்தை ரசிப்பது உகந்தது!!
12. நாம் அடிக்கடி செல்லும் குறு ஆலோசனை கூட்டங்களை முடிந்தவுடன் அந்த அறையின் விளக்குகள், ப்ரோஜெச்டர்கள் "L.C.D projectors", குளிரூட்டி போன்ற சாதனைகளை மறவாமல் அணைக்க வேண்டும்.
13. சினிமா, விளையாட்டு, பொழுது போக்கு, செய்திகள் இவற்றை அலசுவதில் செலவழிக்கும் நேரத்தில் சில நிமிடங்களாவது நம் சுற்று சூழல் சீர்கேடுகளை பற்றி தெரிந்து கொள்ள பயன்படுத்துவோம்.
14. இந்த செய்தியை உங்கள் நண்பர்களுக்கும் பரப்புங்கள். பூமியை வாழ விடுங்கள்.
15. இந்த பூமியை ஏற்கனவே விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் வாழ்வதற்கு ஒரு அசாதாரண இடமாக மாிவிட்டோம். விரைவில் அது மனித இனத்தை பாதித்து நாமும் நம் சந்ததிகள் வாழ கடிமாகாமல் பார்த்துக்கொள்வது நமது இன்றியமையாத கடமை.
பூமியை காப்பாற்ற நம்மால் செய்ய முடிந்தவை சில
Posted by
தமிழர் நேசன்
Tuesday, May 5, 2009
0 comments:
Post a Comment